உன்னத தேவனே என் இயேசு ராஜனே - Unnatha Devane en Yeshu Rajane

உன்னத தேவனே என் இயேசு ராஜனே

உம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா

உம் அன்பைப் பருகிட ஓடோடி

வந்துள்ளேன் உம்மாக மாறிட உலகை மறக்கிறேன்

இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்

உமக்காக துடிக்குதையா

நினைவெல்லாம் பேச்செல்லாம்

நேசரே உம்மைப் பற்றித்தானே ஐயா

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே

தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

பேரின்பக் கடலிலே ஓய்வின்றி மூழ்கணும்

துதித்து மகிழணும் தூயோனாய் வாழணும்

மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே

உம்முக சாயலாய் உருமாற்றும் தெய்வமே

கொடியாக படரணும் உந்தன் நேசமே

மடிமீது தவழணும் மழலைக் குழந்தை நான்

ஐயா உம் நிழலிலே ஆனந்த பரவசம்

அளவிடா பேரின்பம் ஆரோக்கியம் அதிசயம்

உன்னத தேவனே என் இயேசு ராஜனே - Unnatha Devane en Yeshu Rajane

Unnatha Devane en Yeshu Rajane

Ummodu innaindida en ullam aengudaiye

Um anbai parugida oododi

Vandhullēn ummaga maridha ulagai marukkiren

Iravellam pagalellam idhayam

Umakkaga thudikkudaiya

Ninaivellam, pechchellam

Nesare ummai patriththane ayya

Thenilum inimaiye, thevittatha amudhame

Thediyum kidaikkatha oppatra selvame

Per inbakk kadalile oiyvindri moolghanum

Thudhiththu makizhṇum, thuiyonay vazhṇum

Marurupamakidum magimaiyin megame

Ummuka saayalay urumatrum Deivame

Kodiaga padaranum unthan nesame

Madimidu thavazhanum mazhalai kuzhandhai nan

Ayya um nizhalile ananda paravasam

Alavida perinbam, arokiyam, adhisayam